போலீசால் நொந்து நூடுல்ஸாகும் ஹீரோவின் கதை.. ‘நூடுல்ஸ்’ டிரெய்லர் வெளியீடு !

NOODLES Movie Trailer

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நூடுல்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

‘அருவி’, ‘கர்ணன்’, ‘துணிவு’, ‘அயோத்தி’, ‘மாமன்னன்’, ‘மாவீரன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால் படத்தில் என்ன நடக்கிறது என்பது இந்த படத்தின் கதை. 

NOODLES Movie Trailer

பிரபல குணசித்திர நடிகர் ஹரிஷ் உத்தமன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  ‘மண்டேலா’ படத்தின் நடிகை ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஆலியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த், பாரி, நகுனா, ஹரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வினோத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் இசையமைத்துள்ளார். ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் சார்பில் அருண் பிரகாஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் வி ஹவுஸ் பிரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story