'அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்' வரவேற்பு விழாவில் 'ஹரிஷ் கல்யாண்'.

photo

நடிகர் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இன்று அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்டுள்ளார்.

photo

விஜய் சேதுபதியுடன் இணைந்துசூது கவ்வும்படத்தின் மூலமாக அறிமுகமானவர் அசோக் செல்வன், தொடர்ந்து தெகிடி, மை கடவுளே, பீட்சா 2 வில்லா, மன்மத லீலை, போர் தொழில் உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இன்று பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளும், ‘தும்பா’, ‘ அன்பிற்கினியாள்படங்களின் கதாநாயகியுமான  கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருநெல்வேலி, பாளையங்கோட்டையில்  உள்ள இட்டேரியில் உள்ள அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் கோலாகலமாக கடந்த 13ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.

இந்த நிலையில் சென்னையில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது, அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துக்கொண்டு மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

Share this story