‘ஹர்காரா’ டிரைலர்- இந்தியாவின் முதல் தபால்காரரின் கதை.
ஹர்காரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான ராம் அருண் காஸ்ட்ரோ நடித்து இயக்கியிருக்கும் படம் ‘ஹர்காரா’. வி1 மர்டர்கேஸ் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான இவர் இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். படத்தின் மற்றுமொரு கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஹர்காரா’ படம் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. ஒரு மலைகிராமத்திற்கு செல்லும் தபால்காரரின் கஷ்டங்கள் நிறைந்த கதை, அந்த மக்களின் வாழ்கைமுறை, பழக்கவழக்கம் என அனைத்தும் படத்தில் உள்ளது. மலைகிராமத்தை சார்ந்த கதை என்பதால் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தேனியை அடுத்த மலைகிராமத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்துள்ளது, கதைக்குள் கதையாக வரும் ஹர்காராவின் கதை ரசிகர்களை நிச்சயம் கவரும்.