கெளதம் வாசுதேவ் மேனன் - விஷால் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்..?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமான விஷால் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மதகஜராஜா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ‛மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால்' போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
இதற்கிடையில் இவர்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு கவுதம் மேனன் வேவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.