கமலுடன் புதிய படத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

கமலுடன் புதிய படத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

கமல் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கமலஹாசன் தற்போது வினோத் இயக்கத்தில் 233 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்திற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்புதிய திரைப்படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஆக்சன் திரில்லர் படமாக தயாராக உள்ளதாம்.

கமலுடன் புதிய படத்தில் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

இந்நிலையில், இப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் கமல் கூட்டணியில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடல்கள் பெரும் ஹிட் அடித்தன. இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Share this story