ஹாட்ரிக் வெற்றி... நடிகர் மணிகண்டன் நெகிழ்ச்சி பதிவு..

manikandan

அடுத்தடுத்து தொடர்ச்சியாக 3 படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியிருப்பதால் நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்து  நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டுள்ளார்.

மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட்நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘குடும்பஸ்தன்’ ஆகிய 3 படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும் திரையிடப்பட்டது. இந்த வெற்றியை முன்வைத்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மணிகண்டன்.



 
அப்பதிவில் “சின்ன வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படத்தினை 50 நாட்கள் திரையரங்குகளில் கொண்டாடப்படுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை! நாங்கள் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடனே இருக்கும்.

என் மீதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் நம்பிக்கை வைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய இயக்குநர்களுக்கு, இப்படத்தினை வெற்றிபெற உதவிய அனைத்து அற்புதமான நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருடைய பங்களிப்பும் முக்கியமானது. மிகப்பெரிய ஆதரவளித்த பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு நன்றி. என்னை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி” என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார். 

Share this story