என் தந்தைக்கு அவரும் ஒரு மகன்தான் - நடிகர் பிரபு இரங்கல்

என் தந்தைக்கு அவரும் ஒரு மகன்தான் - நடிகர் பிரபு இரங்கல்

இன்று காலை முதல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த்தின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல், விஜயகாந்த் குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார்.

என் தந்தைக்கு அவரும் ஒரு மகன்தான் - நடிகர் பிரபு இரங்கல்

குடும்பத்துடன் அஞ்சலி விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகர் பிரபு, "என் அப்பா சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை உறுதுனையாக நின்றவர் விஜயகாந்த் அண்ணன். நான் செய்ய வேண்டிய கடமையை அன்றைக்கு விஜயகாந்த் அண்ணன் செய்தார். அன்று கடைசிவரை நின்று சிவாஜியை நல்லடக்கம் செய்தபிறகு என் அம்மாவைப் பார்த்து எல்லாத்தையும் ஒப்படைத்து விட்டுத்தான் சென்றார் விஜயகாந்த் அண்ணன். அவரும் சிவாஜிக்கு ஒரு மகன்தான். அந்த நன்றிக்காக நாங்கள் குடும்பத்துடன் வந்து அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு அவரை நல்லடக்கம் செய்து அஞ்சலி செலுத்தப் போகிறோம்" என்று கூறினார்.

Share this story