மாநகரம் பட நடிகரா இவர்.., ரசிகர்கள் அதிர்ச்சி...!

மாநகரம் படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீ, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் ஸ்ரீ அதைதொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அங்கீகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் மிகவும் அழகாகவும் மிடுக்காகவும் தோற்றத்தில் ஒரு துடிப்பான இளைஞன் தோற்றத்தில் இருந்த ஸ்ரீ, தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் அளவுக்கு அவரது புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. தலைமுடி நீளமாக வளர்த்துக் கொண்டு, உடல் எடை மிகவும் குறைத்து காணப்படுகிறார்.உண்மையில் இது நடிகர் ஸ்ரீதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லை ஸ்ரீயின் தோற்றத்தை போல் இருக்கும் வேறொருவரின் புகைப்படமாக இருக்கும் என சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து நடிகர் ஸ்ரீ விளக்கம் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகினறனர்.