நான் நடிக்காமல் இருந்ததற்கு அவர் காரணம் அல்ல - ஜோதிகா

நான் நடிக்காமல் இருந்ததற்கு அவர் காரணம் அல்ல -  ஜோதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இதேபோன்று 2000-ம் ஆண்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. இவர்கள் இருவரும் ஏராளமான திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். முதன்முதலில் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' என்ற படத்தின் மூலம் இணைந்த இவர்கள், அதன்பிறகு 'உயிரிலே கலந்தது', 'காக்க காக்க', 'பேரழகன்', 'மாயாவி', 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். முன்னணி நடிகர்களாக இருந்த இவர்கள் கடந்த 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார். அதன்பிறகு ‘36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். 

நான் நடிக்காமல் இருந்ததற்கு அவர் காரணம் அல்ல -  ஜோதிகா

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் போனதற்கு தனது மாமனார் சிவக்குமார் காரணமில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகக்தான் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். 

Share this story