ஒன்ஸ் மோர் படத்தின் 2வது பாடல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு..!
ஒன்ஸ் மோர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இதயம் சொன்னால் கேட்காதா..... 'ஒன்ஸ் மோர்' பட பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!அந்த வகையில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் தான் ஒன்ஸ் மோர். இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜெய் பீம் மணிகண்டனின் குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
When love comes your way.. the only question that matters is "Idhayam sonnaal ketkaadhaa?" ❤
— Million Dollar Studios (@MillionOffl) November 15, 2024
“Idhayam” from #OnceMore in ever sweetest #VineethSreenivasan's vocals drops tomorrow at 5:30PM 🥳🥁
Written & directed by @isrikanthmv ✨
A @heshamawmusic musical 🎶 pic.twitter.com/lDp5wNzZ1L
ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசையமைத்திருக்கிறார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அடுத்தது இந்த படத்தில் இருந்து இதயம் எனும் இரண்டாவது பாடல் நாளை (நவம்பர் 16) மாலை 5:30 மணி அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த இதயம் பாடலுக்கான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.