ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும். இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தத் சீரிஸை A Tele Factory நிறுவனம் தயாரிக்கிறது, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்குகிறார். 

ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்நிலையில், தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் மார்ச் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த தொடர் வெளியாகிறது. 

Share this story