ஹார்ட் பீட் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு...!

ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளிட்டவற்றை மையக்கருவாக வைத்து இத்தொடரின் முதல் பாகம் எடுக்கப்பட்டு வந்தது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் ஒளிபரப்பப்பட்ட ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் முதல் பாகத்தில் நடித்த நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியானேஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட் இணையத் தொடர் மே 22 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.