கனமழையால் தியேட்டரில் வசூல் பாதிப்பு

கனமழையால் தியேட்டரில் வசூல் பாதிப்பு

டிசம்பர் 1-ம் தேதி நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது.  நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதேபோல, அதே நாளில் அனிமல் திரைப்படமும் வெளியானது. சந்தீப் ரெட்டி இயக்கி இப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், வசூல் ரீதியாக கோடிக்கணக்கில் குவிந்து வருகிறது. ஹரிஸ் கல்யாண் மற்றும் இந்துஜா நடித்த பார்க்கிங் திரைப்படமும் டிசம்பர் 1-ம் தேதி வெளியானது. மூன்று திரைப்படங்களும் வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது. 

கனமழையால் தியேட்டரில் வசூல் பாதிப்பு

மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியதால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 

Share this story