இந்த வாரம் வெளியாகும் படங்கள் லிஸ்ட் இதோ..!

movies

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரம் (27-ந்தேதி) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம்... சூர்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி- கார்த்தி நடிக்கும் படம் மெய்யழகன். இந்த திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி வெளியாகிறது. ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சி.பிரேம் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். meyyazhgan

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் செப்டம்பர் 27 ல் வெளியாக இருக்கும் திரைப்படம் தேவரா. இந்த படத்தில் சைத்ரா ராய், சயிப் அலி கான், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.devera

 சட்டம் என் கையில் சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'சட்டம் என் கையில்' படம் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. மெரினா, வாகை சுடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது சட்டம் என் கையில் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். sathish

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள `ஹிட்லர்' திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இப்படத்தி இயக்கி உள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். hitler

பேட்ட ராப் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான்  இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். புளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்த படம் செப்.27-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. petta rap

விஜய் சத்யா, ஷெரின் நடித்திருக்கும் தில் ராஜா திரைப்படம், செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் இத்திரைப்படத்தில், கலக்கப்போவது யாரு புகழ் பாலா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
 

Share this story