நாளை வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ...
இந்த வாரத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, நந்தன், கடைசி உலகப் போர், தோழர் சேகுவரா, தோனிமா ஆகிய ஆறு படங்கள் செப் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன.தமிழ் சினிமாவில் வாராவாரம் நிறைய படங்கள் வெளியாவது வழக்கம். கடந்த 5ம் தேதி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஏராளமான படங்கள் வெளியாக உள்ளது.இந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாக உள்ளன.
கோழிப்பண்ணை செல்லதுரை : சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லதுரை. அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. சீனு ராமசாமியின் வழக்கமான மனித உணர்வுகளை பேசும் படமாக இது இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
#LubberPandhu comes to theatres on the 20th of September 🏏
— Prince Pictures (@Prince_Pictures) September 18, 2024
A carnival of cricket, family emotions and entertainment!
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia. @Prince_Pictures @iamharishkalyan #AttakathiDinesh @tamizh018 @isanjkayy #Swasika @kaaliactor… pic.twitter.com/h5NJEJzTOw
null
லப்பர் பந்து : தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லப்பர் பந்து. இதுவும் ஒரு கிரிக்கெட் தொடர்பான படம்தான். இதில், மாமனார், மருமகனுக்குள் கிரிக்கெட் போட்டியில் உள்ள ஈகோ பற்றி சொல்லியுள்ளனர். அத்துடன் காதல், சாதிய ஏற்றத்தாழ்வு எப்படி விளையாட்டில் ஊடுருவியுள்ளதையும் சொல்கிறது இப்படம்.
null#KadaisiUlagaPor - 2 days to go 🤟🏻❤️ pic.twitter.com/yPAwR12SSr
— Hiphop Tamizha (@hiphoptamizha) September 18, 2024
நந்தன் : கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் சசிகுமார், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நந்தன். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியில் இருந்தும் மரியாதை கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுகின்றனர் என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கடைசி உலகப் போர் : ஹிப் ஹாப் தமிழா எழுதி இயக்கி நடித்துள்ள படம் கடைசி உலகப் போர். இப்படத்தை தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதில் நாசர், நட்டி நட்ராஜ், அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் சத்யராஜ் நடித்த தோழர் சேகுவேரா, தோனிமா ஆகிய படங்களும் இந்த வார வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.