உலக நாயகன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இதோ...
கமல் ஹாசனின் அசத்தலான நடிப்பில் தயாராகிவரும் ‘தக் லைஃப்’ படம் அவரது 234வது படமாக தயாராகி வருகிறது. கிட்ட தட்ட 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னம்-கமல் கூட்டணி இந்த படத்தில் இணைவதால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மல்டி ஸ்டார் படமாக தயாராகும் இந்த படத்தில் துல்கர் சல்மான், திரிஷா, ஜெயம்ரவி, அபிராமி ஆகியோர் இணைந்துள்ளனர். இதுதவிர இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும், வினோத் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார். அதையடுத்து பிரபாஸ் நடிக்கும் கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
#KH237 - Unexpected..💥 Ulaganayagan #Kamalhaasan's 237th film to be directed by Anbariv Masters@RKFIpic.twitter.com/jwtj9RIDph
— Tamil TV Channel Express (@TamilTvChanExp) January 12, 2024
இந்நிலையில், கமல்ஹாசன் நடிக்கும் 237-வது படத்தின் அறிவிப்பு வௌியாகி உள்ளது. அதன்படி, கோலிவுட்டின் சண்டை பயிற்சியாளர்கள் அன்பு மற்றும் அறிவு மாஸ்டர்கள் இப்படத்தை இயக்குகின்றனர். அடுத்த ஆண்டு இத்திரைப்படம் வெளியாகிறது. ன் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.