கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமியின் கண்ணகி பட முன்னோட்டம் இதோ

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமியின் கண்ணகி பட முன்னோட்டம் இதோ

முன்னாள் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் 'தும்பா' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'ஹெலன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்தார். அதில் அவரது அப்பா அருண் பாண்டியனும் நடித்திருந்தார். கீர்த்தி பாண்டியன் அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் கணணகி. இந்தப் படத்தில்  அம்மு அபிராமி, வித்யா பிரதீப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஷான் ரஹ்மான் என்பவர் இசையமைக்கிறார். தனுஷ் மற்றும் ஜெ தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஷாலினி படத்தை இயக்கியிருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமியின் கண்ணகி பட முன்னோட்டம் இதோ

இந்நிலையில், கண்ணகி படத்தின் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Share this story