விஜய் ஆண்டனியுடன் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் நடித்து வரும் ஹீரோயின் -யார் தெரியுமா ?

vijay antony
தெலுங்கில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘ஜாதி ரத்னலு’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஃபரியா அப்துல்லா. தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே நடித்து வந்த அவர் தற்போது தமிழில் விஜய் ஆண்டனியுடன் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படவிழா ஒன்றில் துல்கர் சல்மானுடன் கலந்துகொண்ட ஃபரியா அப்துல்லா பேசுகையில், ‘‘நான் முதன் முதலாக துல்கர் சல்மான் படம் என பார்த்தது ‘சார்லி’ தான். அப்படத்தில் ஹீரோயினாக நான் என்னையே நினைத்துக் கொண்டேன். அதன்பிறகு சினிமா துறையில் நுழைந்து எப்படியாவது அவரை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். எனது முதல் படமான ‘ஜாதி ரத்னலு’ வெளியானபோது அதன் டீசரை துல்கர் சல்மானுக்கு டேக் செய்தேன். அவர் அதற்கு பதிலளித்தார். அந்த சந்தோஷத்தில் எனது மொபல் போனை மேலே தூக்கி போட்டேன். இப்போது அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவருடன் நானும் சேர்ந்து பங்கேற்று இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

Share this story