ஹீரோவுக்கு சமமாக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா ?-பட்டியல் இதோ ....

trisha

நடிகை அனுஷ்கா விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கு, சில வருடங்களுக்கு முன்பிருந்து பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதையடுத்து இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க சுமார் ரூ.5-7 கோடி சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 ரெட்ரோ பட நாயகி பூஜா ஹெக்டே, தமிழில் கனிசமான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அடுத்து கூலி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இவர், ஒரு படத்திற்கு ரூ.2.5-7 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 நடிகை சமந்தா. இப்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர், ஒரு படத்திற்கு ரூ.3-8 கோடி வரை சார்ஜ் செய்வதாக கூறப்படுகிறது.

 நடிகை த்ரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி வெவ்வேறு மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர், இப்போது ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

 குபேரா நடிகை ராஷ்மிகா மந்தனா. அதிக வசூல் பெற்ற அனிமல், புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது தென்னிந்தியாவின் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவரது சம்பளம், ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது.

 நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் இவர், ஒரு படத்திற்கு ரூ.8 கோடி முதல் 18 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

 சாய் பல்லவி, சமீபத்தில் அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம், பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவர் தனது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறாராம். இவர், ஒரு படத்திற்கு ரூ.18-20 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

Share this story