'சும்மா தெறிக்கிறார்பா...' இளம் ராப் பாடகரை புகழ்ந்த இயக்குனர் செல்வராகவன் ....

இயக்குனர் செல்வராகவன், தான் இளம் ராப் பாடகர் பால் டப்பா அனிஷின் ரசிகர் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன், 'காதல் கொண்டேன்' '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என் ஜி கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவ்வபோது துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2 படத்தை இயக்கி வருகிறார். இவர தற்போது இளம் ராப் பாடகர் பால் டப்பா அனிஷின் ரசிகர் ஆகிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.
I have become a big fan of * Paal Dabba "
— selvaraghavan (@selvaraghavan) March 28, 2025
சும்மா தெறிக்கிறார்பா 😍😍 pic.twitter.com/wuWBRy5uaz
பாடகர் பால் டப்பா அனிஷ், ஜெயம் ரவி நடிப்பில்| வெளியான பிரதர் படத்தில் 'மக்காமிஷி...' பாடலைப் பாடியுள்ளார். ஹாரிஸ் ஜெயாராஜ் இசையில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுக்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதோடு மட்டுமின்றி கேரள மாநில விருது பெற்ற இசையமைப்பாளர் சிஷின் சியாம் இசையில், ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படத்தில் 'கலாட்டா...' என்ற பாடலைப் பாடியுள்ளார்.
இதோடு மட்டுமின்றி பல தனிப் பாடல்களையும் (ஆல்பம்) வெளியிட்டுள்ளார். 170CM, 3SHA, AI, காத்து மேல, ஆகிய தனிப்பாடல்களையும் வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.