"இவன் ஒரு பக்கம்.. அவன் மறுபக்கம்" - மாற்றான் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு
Thu Oct 12 2023 4:08:31 AM

சூர்யா நடித்த மாற்றான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது.
சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருந்த திரைப்படம் மாற்றான். கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். ரவி பிரகாஷ், அஜய் ரத்னம், தாரா ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 2012 ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.