15 கோடி பார்வைகளை கடந்த ‘ஹே மின்னலே’ ...

அமரன் படத்தில் இடம்பெற்ற ஹே மின்னலே பாடல் 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
My 700th composition reaches Yet another 150 million with some love this time thank u #Amaran hey minnale … pic.twitter.com/QMYuPUs9Ej
— G.V.Prakash Kumar (@gvprakash) February 15, 2025
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரின் நடிப்பும் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ஹே மின்னலே’ பாடல் தற்போது வரை 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது என ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மேலும் சமீபத்தில் தான் தனுஷ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலும் இணையத்தில் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.