ஹே மின்னலே ப்ரோமோ.. ஜி.வி பிரகாஷின் 700-வது பாடல்

gv prakash

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

null


இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது. தற்பொழுது ஹே மின்னலே பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் மூலம் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Share this story