அமரன் படத்தில் இடம்பெற்ற `ஹே மின்னலே' வீடியோ பாடல் வெளியீடு
1731570707830
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் உலகளவில் 250 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். படத்தின் இடம் பெற்றுள்ள ஹே மின்னலே பாடல் மிகப் பெரியளவில் ஹிட்டாகியது. பலரது போன் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் இந்த பாட்டு மாறியுள்ளது. இந்நிலையில் ஹே மின்னலே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாட்டில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையே உள்ள காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.