ஹே சூப்பர்ஸ்டாருடா ஹண்டர் வண்டார் சூடுடா' - வேட்டையன் லிரிக் வீடியோ

vettaiyan
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தற்பொழுது படத்தின் ஹண்டர் வண்டாரு என்ற பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் வரும் ரஜினிகாந்த் காட்சிகள் மிகவும் ஸ்டைலாகவும் மாஸாகவும் அமைந்துள்ளது. இதனால் இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this story