விமலின் ‘மன்னர் வகையரா’ பட விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Vimal

விமல் நடிப்பில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இதனிடையே போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘சார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விமலின் தயாரிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மன்னர் வகையறா’  திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தயாரிக்க கோபி என்பவரிடம் 4.50 கோடி ரூபாயை  கடனாக வாங்கியிருக்கிறார் விமல். கடனை அவர் காசோலையாக கோபிடம் அனுப்பியிருக்கிறார். அதையடுத்து விமல் மீது காசோலை முறைகேடு வழக்கு கோபி தொடர்ந்தார். Mannar vagayara

இந்த வழக்கு தொடர்பாக முன்பு விமல் ஆஜராகி இருந்த நிலையில், சாட்சிகளை விசாரிக்க அவர் தரப்பில் யாரும் முன் வராமல் இருந்திருக்கின்றனர். இதனால் விமல் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் மனு கொடுத்திருக்கிறார். இதை குறுக்கு விசாரணை செய்த நீதிபதி, வழக்கை விமல் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார் என்று கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ரூ.300 அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், விமல் கடனை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கு விசாரணையில் விமல் தரப்பு ஆஜாராகமல் இருந்ததால், கோபியிடம் பெற்ற கடனை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விமலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this story