எங்க வந்து யாரு கிட்ட - 2024 ஆண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படம் The G.O.A.T
1726324227000
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக அதன் இரண்டாம் வாரத்தில் பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் 200 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.