உயர் தரத்தில் பயிற்சி.. தமிழக அரசை பாராட்டிய நடிகர் ஆர்யா..
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) பெயரை எனது ஜெர்சியுடன் அணிந்து கொள்வதை பெருமையாக பார்க்கிறேன். ஒலிம்பிக் போட்டியை போல தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்தியாவில் இதுபோன்று மிக நேர்த்தியாக ஒரு போட்டியை SDAT தான் நடத்தியுள்ளது என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் புதிய (THE OLD MIRCHI BIRIYANI) பிரியாணி கடையை நடிகர் ஆர்யா திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா, சென்னை அண்ணா நகரில் பலவித பிராண்ட் பிரியாணி கடைகள் உள்ளது. இருப்பினும் அண்ணா நகரில் ஒரு கடையை திறப்பது என்பது சவாலான விஷயம். அண்ணாநகர் என்றாலே பிரியாணி தான் என்றார்.
வெளியூர் படப்பிடிப்பில் இருந்ததால், இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக நடத்தப்பட நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பா.ரஞ்சித் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் சார்பட்டா படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறினார். ஒரு படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கும், ரசிகர்களிடம் சென்று சேர எளிதாக இருக்கும் ஆனால் இதையெல்லாம் மீறி படம் நன்றாக இருந்தால்தான் இரண்டாவது பாகம் வெற்றியடையும். மற்றபடி இரண்டாவது பாகத்தை திணிக்கக் கூடாது என்றார்.
விளையாட்டு வீரராக இருக்க பிடித்துள்ளதா நடிகராக இருப்பது பிடித்துள்ளதா என்ற கேள்விக்கு பள்ளி பருவத்திலிருந்து விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளவன் நான் பிறகு எதிர்காலத்தில் நடிகராகியுள்ளேன் இரண்டிலும் எனக்கு விருப்பம் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் வழங்கப்படும் பயிற்சிகள் உயர்தரத்தில் உள்ளது. குறிப்பாக நான் சமீபத்தில் அங்கு பயிற்சி மேற்கொண்டேன். மூன்று நான்கு மாதங்களிலேயே அதிக அளவிலான முன்னேற்றங்கள் தெரிந்தது.
ஒலிம்பிக் சென்று விளையாடும் வீரர்களுக்கு ஏற்ப அற்புதமான கட்டமைப்புகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ளது அதற்கேற்ற பயிற்சியாளர்களும் உள்ளனர். மேலும் அடுத்த கட்ட உயர்தர கட்டமைப்புகளால் ஒலிம்பிக்கில் சென்று சேரும் அளவிற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன். சமீபத்தில் படங்களுக்கு வரும் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு? விமர்சனத்தை தவிர்க்க முடியாது.அது இயல்பு, அதேபோல படம் நன்றாக இருந்தாலும் அனைவரும் பாராட்டுகிறார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜெர்சியை நான் அணிந்து கொள்வதை பெருமையாக பார்க்கிறேன். ஒலிம்பிக் போட்டியை போல தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை நடைபெற்றது இந்தியாவில் இதுபோன்று நடப்பதை இங்குதான் பார்க்கிறேன். அந்த விஷயத்தில் பெரிய ஒரு முன்னுதாரணமாக எஸ் டி ஏ டி உள்ளது. இதனை நினைக்கையில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. எஸ் டி ஏ டி உடன் இணைந்து விளையாட்டு களில் கலந்து கொள்வது எனக்கு பெருமையாக உள்ளது எம தெரிவித்தார்.