இந்தியில் தெறி பட ரீமேக்... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்...

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் சார்பில் முரட் ஹெதேனியுடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லியின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். ஜீவா நடித்த கீ படத்தை இயக்கிய காளீஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
nullPlease shower your blessings and good wishes on this project that's very close to my heart. This one is going to be very special working with my friends, like family ❤️@jiostudios @aforapple_offcl @Cine1Studios @Atlee_dir @MuradKhetani @priyaatlee #jyotideshpande @kalees_dir… pic.twitter.com/y3SIEdRfQe
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 14, 2024
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தற்போது தொடங்கி இருக்கிறது. பூஜை வீடியோவை படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.