கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் இரங்கல்

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமன்றி இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தொடர்ந்து வெற்றிகொடி நாட்டிய அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியல் வாழ்விலிருந்து விலகினார். இருந்தும் அறிக்கை வாயிலாக அரசியல் செய்தார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல்நிலை மிகவும் மோசமாகவே தொடர் சிகிச்சையில் இருந்து வந்த விஜயகாந்த் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். அவரது இறப்பு செய்தி பலரையும் அதிரவித்துள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Heartbroken to know that our ‘Puratchi Kalingar’, ‘Captain’ Vijayakanth is no more. He was a wonderful human being, Hero of the Masses,a multi faceted personality and an astute politician. Though he never acted in straight Telugu films, he is hugely popular and loved by the… pic.twitter.com/r0N4olxFrL
— Chiranjeevi Konidela (@KChiruTweets) December 28, 2023
இந்நிலையில், தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி, விஜயகாந்த் மறைவு செய்தியை அறிந்து இதயம் நொறுங்கிப் போனதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளர், பன்முகத் திறமை கொண்டவர், புத்திகூர்மையான அரசியல்வாதி விஜயகாந்த் என சிரஞ்சீவி குறிப்பிட்டுள்ளார்.
“Kallazgar “ my first film ever , was a gift from the legend “ VIJAYKANTH” sir.. He came across this still of mine and in no time I was filming with him.. I owe my career to him .. Will miss you so much sir. RIP CAPTAIN 💔 pic.twitter.com/Zb4kaipBtV
— sonu sood (@SonuSood) December 28, 2023
அதேபோல, பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூறியுள்ளார். எனது முதல் படமான கள்ளழகர் லெஜெண்ட் விஜயகாந்தின் பரிசு. எனது திரைப்பயணத்தில் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என படக்காட்சியை பகிர்ந்து நடிகர் சோனுசூட் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.