ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்த ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி பதிவு..!

hip hop

தமிழில் நன்கு புகழ் பெற்ற ராப் பாடகராக உருவாகி இன்றைக்கும் கொடிகட்டிப் பறப்பவர், ஹிப் ஹாப் ஆதி. இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்ட இவருக்கு ஏராளமான இளம் ரசிகர்கள் உள்ளனர்.  மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவ ஹிப்ஹாப் ஆதி. சமீபத்தில் அவரே தயாரித்து இயக்கி நடித்த "கடைசி உலகப் போர்" திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகரான சிறுவனை நேரில் சந்தித்த ஹிப்ஹாப் ஆதி அவருக்கு இன்ப அதிர்சசி கொடுத்துள்ளார்.


இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை  ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். அதில், என் இசையோ , கலையோ ஒருவரை எப்படி தொடுகிறது என்று நான் ஆராய முற்படுவதில்லை. ஆனால் அவை தொடும் இடங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதை விட மன நிறைவையும் , பொறுப்புணர்வையுமே அதிகமாக அளிக்கிறது ! அகிலேஷ் என் ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்ப்பதும், என் இசை கேட்டவுடன் இது ஹிப்ஹாப் தமிழா மியூசிக் என்று கரெக்டாக சொல்லுவான் என்று அவன் பெற்றோர்கள் சொன்னது, நான் என்ன தவம் செய்தேன் என் கலை கொண்டு இப்படி அன்பு சொந்தங்கள் பெற என்ற நன்றி உணர்வயே மேலோங்கி எழ செய்கிறது! என பதிவிட்டுள்ளார். 
 

Share this story