'ஜோ' பட இயக்குனருடன் கைக்கோர்க்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி...!

aadhi

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அதன் பிறகு 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு 'பிடி சார்', 'கடைசி உலகப் போர்' என இரண்டு படங்களில் நடித்தார். இதில் 'கடைசி உலகப் போர்' படத்தை அவரே தயாரித்து, இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய அடுத்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் ரியோ நடித்த 'ஜோ' திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.joe

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்தை பிரமோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் முன்பு 'மாறா' என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

 

Share this story

News Hub