சத்தமே இல்லாமல் நடக்கும் ‘ஹிப் ஹாப் ஆதி’ படத்தின் சூட்டிங் – வெளியான வேற லெவல் அப்டேட்.

photo

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது வீரன் படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆதியில் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்து இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப்ஹாப் ஆதி. மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இவரது நடிப்பில் வீரன் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

photo

தற்போது ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆதியே கதை, திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் , கதாநாயகன், தயாரிப்பாளர் என அனைத்து பரிமாணங்களையும் ஒரு சேர அமைத்துள்ளாராம். படத்தின் கதாநாயகியாக நட்பே துணை படத்தில் ஆதியுடன் நடித்த அனகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சத்தமே இல்லாமல், சென்னை ECR பகுதியில் நடந்து முடிந்துள்ளதாம். அதுமட்டுமல்லாமல், படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் தான் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படம் ஆதியில் வீரன் மற்றும் பி.டி சார் படத்தை தொடர்ந்து வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

 

Share this story