இளம் ராப் பாடகர்களை பாராட்டி ஊக்குவித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி...

hiphop aadhi

தமிழ் சினிமாவை உலக சினிமாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் சினிமாவில் இன்னும் அறிமுகமாகவேண்டிய பல்வேறு விஷயங்கள் இருப்பது தெரியவரும். அப்படி, தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் மெல்ல மெல்ல அறிமுகமாகி, தற்போது தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை அடைந்துள்ள ஒரு கலை வடிவம் என்றால், அது சொல்லிசைதான், அதாவது ராப் பாடல்கள். தமிழில் முதன் முதலில் வந்த ராப் பாடல் என்றால் அது, பொல்லாதவன் படத்தில் இடம் பெற்ற எங்கேயும் எப்போதும் பாடல்தான். அதேபோல் இரண்டாவது பாடல், ஆடுகளம் படத்தில் இடம் பெற்ற 'வாழ்க்கை ஒரு போர்க்களம்' பாடல். இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர், யோகி.பி, பாடல்களை எழுதியவர் யுகபாரதி. அதன் பின்னர், தமிழில் நன்கு புகழ் பெற்ற ராப் பாடகராக உருவாகி இன்றைக்கும் கொடிகட்டிப் பறப்பவர், ஹிப் ஹாப் ஆதி. இவர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமாவில், இன்றைக்கு முக்கிய இடத்தில் இருக்ககூடிய, ராப்பர்களான தெருக்குரல் அறிவு, அசல் கோளாறு மற்றும் பால் டப்பா ஆகியோரைப் பாராட்டினார். நிகழ்ச்சியில் பாராட்டியது மட்டும் இல்லாமல், அவர்கள் மூவர் தொடர்பாகவும், தமிழ் சினிமாவில் ராப் பாடல் ஒரு கட்டத்தில் எப்படி இருந்தது, இன்றைக்கு அது எந்த அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது என மிகவும் கர்வத்துடன் குறிப்பிட்டுள்ளார்.  ஹிப் ஹாப் ஆதியைப் பொறுத்தவரையில், தானே எழுதி பாடிய ராப் பாடல்களை, முதலில் ஆல்பம் பாடல்களாக ரிலீஸ் செய்து, ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர், சில சினிமா பாடல்களில் தனது ராப் மெட்டுக்கள் இடம் பெறும் விதமாக பாடல்கள் பாடினார். ஆனால், தான் கதாநாயகனாக அறிமுகமான படமான மீசையை முறுக்கு படத்தில், தனது ஆல்பம் பாடல்களை இடம் பெறச்செய்து, ராப் பாடலை வெகுஜன ரசிகர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தார். அதன் பின்னர் ராப் பாடல்கள் தமிழ் சினிமாவில் தனி வரவேற்பைப் பெற்றது


. தற்போது வெகுஜன ரசிகர்களால், கொண்டாடப்படும், சொல்லிசைக் கலைஞர்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில், "திரைப்பட பாடல்களில் fillerகளாக உபயோகப்படுத்தப்பட்ட காலகட்டத்தை கடந்து , college competition-களில் , rappersக்கு எல்லாம் அனுமதி இல்லை என்பதை தொடர்ந்து - இன்று தமிழ் திரைப்படங்களுக்கு ஹிட் பாடல்கள் வேண்டும், யாராவது rapper ஐ கூப்பிடு என்னும் அளவுக்கு தன் சுதந்திர படைப்புகளின் மூலம் ஒரு மேடையை தனக்கெனவே அமைத்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் ஹிப்ஹாப் கலைஞர்கள்! ஏன் அறிவு , அசல் கோலார், பால் டப்பா போன்ற இந்த கலைஞர்கள் இன்னும் கொண்டாடப் பட வேண்டும் என சொல்ல என்னை விட பொருத்தமான ஒருவன் இல்லை. எந்த குடும்ப பின்னணியும் இன்றி , தன் வாழ்க்கையின் வலிகளை கலையாக வடித்து , இதெல்லாம் ஒரு இசையா என மட்டம் தட்டும் 'இசை என்றால் என்ன தெரியுமா' என்ற கூட்டங்களின் இசை அரசியலை உடைத்து , சுதந்திர இசை மூலம் இன்று தமிழ் இசையுலகின் ஆளுமைகளாக இருக்கும் என் தமிழ் ஹிப்ஹாப் தம்பிகளை கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன்! இதை ஒரு சுதந்திர இசை புரட்சியாகவே பார்க்கிறேன். Network, background இன்றி இதை போல் ஒரு industryல் மேலேறி வருவது எவ்வளவு கடினம் என்று மேலேறி கொண்டிருக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் தெரியும். தம்பிகள்: நாளை பற்பல சுதந்திர கலைஞர்கள் சுயம்பாக தோன்ற இன்று அறிவு, அசல் போன்றோர் செய்யும் பங்களிப்பு மிக முக்கியம். என்னப்பா இப்ப தானே ஆரம்பிக்குது அதுக்குள்ள என்ன சாதிச்ச மாதிரி பேசுற என கேட்போருக்கு- இது இங்க ஆரம்பிச்சதே சாதனை தான்! வாழ்க என் அருமை தம்பிகள் - ஆள்க இந்த இசை உலகை ❤️" என பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

Share this story