நாளை வரார் ‘வீரன்’... ஹிப்ஹாப் ஆதியின் பிறந்தநாளில் வெளியாகும் சர்ப்ரைஸ் !

veeran

 ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஹிப்ஹாப் பாடல்கள் மூலம் பிரபலமான ஆதி, தற்போது நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார். ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார். 

veeran

இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.  ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. 

இப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆதியின் பிறந்தநாளையொட்டி நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஃப்ர்ஸ்ட் லுக் மிரட்டலாக இருக்கும் என படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story