டாக்டர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி... ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு !

hiphop tamizha adhi

இந்தியாவில் முதல்முறையாக இசைத்தொழிலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே நபர் நான் தான் என்று இசையமைப்பாளர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி தெரிவித்துள்ளார். 

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆல்பம் பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆதி. மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த பாடலுக்கு பிறகு சினிமாவில் இசையமைப்பாளராக கால்தடம் பதித்தார். இசையமைப்பாளராக வெற்றி வாகைச்சூடிய அவர், தற்போது நடிகராக கலக்கி வருகிறார். 

hiphop tamizha adhi

இப்படி சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமைக் கொண்டு பணியாற்றி வருகிறார். ஆதியின் இசையை போன்று திரைப்படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். 

 இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் பிஎச்டி முடித்துள்னேன். இனி நான் டாக்டர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இந்த பட்டம் படித்து வாங்கியது. இசைத்தொழில் முனைவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இத்துறையில் இந்தியாவிலேயே முதன்முறையாக எனக்கு தான் முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

 

Share this story