ஓடிடியில் ரிலீசாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

veeran

 ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக வெளியாகியுள்ளது ‘வீரன்’.

veeran

சூப்பர் ஹீரோ படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வெளியான திரைப்படம் தான் இது. ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார். நடிகர் வினய் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30-ஆம் இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடித் தளத்தில் வெளியாகிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story