சூப்பர் ஹீரோவாக மாறிய ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி... ‘வீரன்’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

veeran

 ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் ‘வீரன்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக கலக்கி வருபவர் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி. ஃபேண்டஸி காமெடி ஆக்ஷன் எண்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

veeran

மேலும் இந்த படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஆதியே இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆதியின் 33வது பிறந்தநாளையொட்டி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சூப்பர் ஹீரோ தோற்றத்தில் இருக்கும் ஆதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story