முரட்டுத்தனமான லுக்கில் ஆதி.. ‘வீரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு !

veeran

‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் ‘வீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. அந்த வகையில் அந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

veeran

இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.  ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 2-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story