சூப்பர் ஹீரோவாக மாறிய ஹிப்ஹாப் தமிழா ஆதி.. ‘வீரன்‘ டிரெய்லர் வெளியீடு !

veeran

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரன்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் ‘மரகத நாணயம்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அந்த படத்தின் இயக்குனரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது ‘வீரன்‘. மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். 

veeran

 ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சூப்பர் ஹீரோ போன்று ஒரு கதாபாத்திரத்தில் ஆதி நடித்துள்ளார். இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார். நடிகர் வினய் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story