வார்னிங்... ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு !

veeran

 ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘வீரன்’ படத்தின் முக்கிய அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

veeran

ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார். ஆதியே இசையமைத்து வரும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவுள்ளார்.  ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்றுள்ளது. 

veeran

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ‘வாரினிங்’ என்று டெர்ராக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அது எந்த மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Share this story