'ஹிட் 3' படத்தின் 2வது பாடல் வெளியீடு...!

naani

நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. 


கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'ஹிட் 3' படத்தின்  முதல் பாடல்  'காதல் வெல்லுமா' அண்மையில் வெளியானது. இந்நிலையில், அந்த படத்தின்AbKi Baar Arjun Sarkaar என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.  

Share this story

News Hub