'ஹிட் 3' படத்தின் 3வது பாடல் வெளியீடு...!

nani

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்தின் தாணு பாடல் வெளியாகி உள்ளது. 
 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ’சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 



படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.  இந்நிலையில், ஹிட் 3 படத்தின் தாணு என்ற பாடல் நாளை வெளியாகி உள்ளது. இதனை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

Share this story