'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியீடு...!

நானி நடிக்கும் 'ஹிட் 3' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது ஹிட் 3 படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.
The sweetest love of the fiercest Sarkaar ❤️#HIT3 first single out now ❤️🔥
— Unanimous Productions (@UnanimousProds) April 2, 2025
▶️ https://t.co/sgMT17Th9E
Hindi - #IshqZindagi
Tamil - #KadhalVelluma
Kannada - #NinagageHudukide
Malayalam - #KanavaayNeeVannu
A @MickeyJMeyer musical ✨
In cinemas worldwide on 1st MAY, 2025.… pic.twitter.com/OTayjoOYCa
கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'ஹிட் 3' படத்தின் புதிய போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், படத்தின் இடம்பெற்ற 'காதல் வெல்லுமா' முதல் பாடல் வெளியாகி உள்ளது.