'ஹிட் 3' படத்திற்கு A சான்று வழங்கிய தணிக்கை குழு...

nani

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் 3 படத்திற்கு தணிக்கை குழு  A சான்று வழங்கியுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் தற்போது 'ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



படத்தின் முதல் பாடலான ப்ரேம வெல்லுவா பாடலை படக்குழு வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.  இந்நிலையில், ஹிட் 3 படத்திற்கு தணிக்கை குழு  A சான்று வழங்கியுள்ளது. அப்படியென்றால் 18 வயதை கடந்தவர்கள் தான் இப்படத்தை பார்க்க முடியும். 

Share this story