'ஆர்ஆர்ஆர்' பட டிரெய்லர் படைத்த சாதனையை முந்திய 'ஹிட் 3' டிரெய்லர்

'ஆர்ஆர்ஆர்' பட டிரெய்லர் படைத்த சாதனையை 'ஹிட் 3' டிரெய்லர் முந்தி சாதனை படைத்துள்ளது.
2020ல் விஷ்வக் சென் நடித்து வெளிவந்த 'ஹிட் - த பர்ஸ்ட் கேஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஓடிடி தளத்தில் வெளியான பின்பு மற்ற மொழி ரசிகர்களையும் அப்படம் வெகுவாகக் கவர்ந்தது. அதற்கடுத்து 2022ல் அடிவி சேஷ் நடித்த 'ஹிட் - த செகண்ட் கேஸ்' படம் வெளியாகி அந்தப் படமும் வெற்றி பெற்றது.தற்போது சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'ஹிட் 3' . மே 1ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யூடியூப் தளத்தில் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 21.3 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடித்து வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 20.4 மில்லியன் பார்வைகளை பெற்றது. இதனால், 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் படைத்த சாதனையை 'ஹிட் 3' டிரெய்லர் முந்தியுள்ளது.