ஹிட்லர் படத்தின் அடியாத்தி பாடல் நாளை ரிலீஸ்
1725624033000
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான டப்பாஸ் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், திரைப்படம் தற்பொழுது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அடுத்த பாடலான `அடியாத்தி' என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியீட்டு வெளியிட்டுள்ளனர்.