பிரபல இயக்குனரின் மகனுக்கு வில்லனாகும் கௌதம் மேனன்... வேகமாக உருவாகும் ‘ஹிட்லிஸ்ட்’ !

hitlist

 நடிகர் கனிஷ்கா  நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் விக்ரமன், தனது மகன் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ‘ஹிட்லிஸ்ட்’ என்ற தலைப்பில் உருவாகும் அந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் இயக்கி வருகின்றனர். 

hitlist

இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரன், அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

hitlist

 தெனாலி, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. காமெடி, ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல இயக்குனரான கௌதம் மேனன் இந்த படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். அவர் தொடர்பாக காட்சிகள் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டது. இதற்கிடையே ‘பத்து தல’ படத்தில் கொடூர வில்லனாக மிரட்டிய அவர், தற்போது ‘லியோ’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Share this story