ஹோலி பண்டிகை : ‘தக் லைஃப்’ படக்குழு வாழ்த்து...!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’Thug Life’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் , இந்தியன்-3 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தக் லைப் படத்தில் சிலம்பரசன், நாசர், ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஷ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
#HappyHoli #Holi2025#ThugLife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR
— Raaj Kamal Films International (@RKFI) March 14, 2025
A #ManiRatnam Film@ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath @trishtrashers @AshokSelvan @AishuL_ @C_I_N_E_M_A_A @abhiramiact #Nasser @manjrekarmahesh… pic.twitter.com/Po9zlGexu9
அமெரிக்காவிற்கு ஏஐ தொழில்நுட்பம் தொடர்பாக படிக்க சென்றிருந்த கமல்ஹாசன், அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு தக் லைப் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. தக் லைப் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.