‘தங்கலான்’ படத்தில் தனது அனுபவம் குறித்து பகிர்ந்த – ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன்.

கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான பா. ரஞ்சித், சியான் விக்ரம் கூட்டணியில் தயாராகிவரும் திரைப்படம் 'தங்கலான்'. கோலார் தங்கவயல் கதைக்களத்தை மைய்யமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் இந்த படத்தில் பாலிவுட் நடிகரான நடிகர் டேனியல் கால்டாகிரோன் இணைந்துள்ளார். இதனை சமீபத்தில் படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில் 'தங்கலான்' படத்தில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோருடன் பணியாற்றிய தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் டேனியல் கால்டாகிரோன்.
"மேற்கத்திய நாடுகளில் என்னுடைய நடிப்பு இயல்பானதாக இருக்கும். அது கதைக்கருவை பொறுத்து மாறுபடும்.. ஆனால், இங்கு வரும்போது, ஒரு குறிப்பிட்ட நாடகத்தன்மை நடிப்பில் இருக்கின்றது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் அதீத நடிப்பு என்று சொல்லலாம். தங்கலான் படப்பிடிப்பு முதல்நாளில் ரஞ்சித், "என்ன? எனக்கு இன்னும் அதிகமாக நடிப்பு கொடு எனக்கு பெரிதாக வேண்டும்.. உடல் ரீதியாக நடிப்பை அதிகமாக கொடுங்கள்.. ' என்றார். நான் வழக்கமான பாணியை செய்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் ரஞ்சித் சொல்வது சரியானது தான்.. எனது நடிப்பு அவர் முயற்சிக்கும் படத்திற்கானது அல்ல என்று.. விக்ரம், நீங்கள் கூறியது போல், அவர் இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் திறமையானவர். எதாவது தவறாக நடந்தால், அவர் சொல்வார், ‘அதை மாற்றியமைப்போம்', நான் இந்த பயணத்தில் செல்ல விரும்பினேன், ரஞ்சித்தை அங்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப் போகிறேன் நான் கதாபாத்திரத்தின் உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதுதான் எனது நோக்கம், அதுவே எனது குறிக்கோள். விக்ரம் எப்போதும் என்னிடம் சொல்வார், 'அந்த நிகழ்வில் எதையாவது புதிதாக கண்டுபிடிப்பது எனக்கு பிடிக்கும், அவர் மிகவும் நல்லவர். அவர் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்." என தனது அனுபவத்தை பகிந்துள்ளார்.